அரசியல்லேட்டஸ்ட்

4 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் மாற்றம்

▪️அமைச்சரவை அந்தஸ்துள்ள 4 அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அரசின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

▪️அந்த தகவல்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்த அமைச்சரவை மாற்றமடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

▪️இந்த மாற்றத்தின்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் தினேஸ் குணவர்தன ஆகிய அமைச்சர்களின் அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

▪️அதற்கமைய வெளிவிவகார அமைச்சராக இருக்கும் தினேஸ் குணவர்தனவுக்கு கல்வியமைச்சுப் பதவியும் எரிசக்தி அமைச்சராக இருக்கும்  டலஸ் அழகப்பெருமவுக்கு ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

▪️அவ்வாறே கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மின்சக்தி அமைச்சராகவும் கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு வெளிவிவகார அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளதாக அரசின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

▪️கடந்த காலங்களில் ஊடகத்துறை அமைச்சர் மற்று கல்வியமைச்சர் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன..

▪️அவ்வாறே ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  வெளியிட்ட சில சர்ச்சைக்குரிய கருத்துகளால் அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button