லேட்டஸ்ட்

நாளை முதல் 4 மாவட்டங்களில் 20 – 30 வயதுகளுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி

செப்டம்பர் – 05, ஞாயிறு- 2021

▪️மேல் மாகாணத்திலும், காலி மாவட்டத்திலும் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

▪️இதற்கமைய, அந்தந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களிலும் அவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

▪️அதேநேரம் கொழும்பில் மேலதிகமாக, விஹாரமாதேவி பூங்கா, தியத்த உயன, பனாகொடை இராணுவ முகாம் மற்றும் வேரஹெர இராணுவ வைத்தியசாலையிலும் நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Back to top button