லேட்டஸ்ட்

சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் பொது முடக்கம் விதிக்கப்படும் – அரசாங்கம்

▪️சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை மூடும் முடிவை எடுக்க தயங்க மாட்டோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

▪️ மேலும் நாட்டை மூடக்கூடாது என்ற பிடிவாதமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

▪️கொவிட் -19 தொற்றை கட்டுப்படுத்த, வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை மூடும் முடிவை அரசாங்கம் எடுக்கத் தவறும் பட்சத்தில் தனியார் மற்றும் அரச துறை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button