லேட்டஸ்ட்

ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் முடித்துக்கொள்ள அரசு ஆராய்வு.

செப்டம்பர் – 07, செவ்வாய்- 2021

▪️கொரோனா பரவல் நிலைமை காரணமாக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் 13 ஆம் திகதி உடன் முடிவுக்கு கொண்டுவர அரசு ஆராய்ந்து வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

▪️ நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , கல்விச் செயற்பாடுகளும் முக்கியமான சேவைகளும் பெரிதும் பின்னடைவாக உள்ளதால் அரசு இவ்வாறு ஆராய்ந்து வருகிறது.

▪️தொடர் ஊரடங்கு உத்தரவு காரணமாக மரண வீதத்தை குறைத்து கொரோனா நோயாளர் எண்ணிக்கையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைக்காதிருக்க அரசு முடிவு செய்துள்ளது.

Back to top button