லேட்டஸ்ட்

அவசர கால சட்டம் தொடர்பில் நீதி அமைச்சர் நாட்டு மக்களுக்கு விளக்கம்.

செப்டம்பர் 07, செவ்வாய் – 2021

▪️ எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதுபோல் மக்களின் உரிமைகளை அடக்கும் விடயங்கள் எதுவும் அவசரகால சட்டத்தில் இல்லை என்றும் . மாறாக அத்தியாவசிய உணவுப்பொருட்களை பதுக்கி வைக்காது விநியோகிக்கும் நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகின்றது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

▪️ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் நேற்று(06) அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு மீதான விவாதத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும்

▪️ நாட்டின் மொத்த உள்நாட்டு தேவையில் 18 வீதம் தான் இங்கு உற்பத்தியாகிறது. மீதி 82 வீதமும் இறக்குமதி செய்யப்படுகிறது. வியாபாரிகள் அதனை பயன்படுத்தி மக்களை சூறையாடுகின்றனர். இதை கட்டுப்படுத்தவே அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Back to top button