லேட்டஸ்ட்

அபராதம் 1 கோடி – அமுலாகிய புதிய சட்டம்!

செப்டம்பர் 06, புதன் 2021

நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை வேண்டுமென்றே உயர்த்தி கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

அதன்படி

  1. தனிநபர் வியாபாரதிற்கான அதிகபட்ச அபராதம் 20,000 ரூபா தொடக்கம் 10 இலட்சம் ரூபாவாகவும்
  2. ஒரு நிறுவனத்திற்கான அதிகபட்ச அபராதம் 200,000 ரூபா தொடக்கம் 1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்

  1. தனிநபருக்கான குறைந்தபட்ச அபராதம் 1,000 ரூபா தொடக்கம் 10,000 ரூபாவாகவும்,
  2. நிறுவனத்திற்கான குறைந்தபட்ச அபராதம் 10,000 ரூபா தொடக்கம் 5,00,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Back to top button