breaking news

நாட்டில் இன்னொரு தீவிரவாத தாக்குதல் – கிடைக்கப்பெற்ற அவசர கடிதம்!

செப்டம்பர் – 09, வியாழன் – 2021

▪️ ஈஸ்டர் தாக்குதலைப்போல மீண்டுமொரு தாக்குதல் நாட்டில் நடத்தப்படலாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

▪️ சிவில் மற்றும் ஊடாக பாதுகாப்பு பிரிவை அதைரியப்படுத்தும் வகையிலான பல முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதனூடாக நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதற்கான சூழ்ச்சி நாட்டிற்குள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் இருப்பதாக அக்கடிதத்தில் பொதுபல சேனா குறிப்பிட்டுள்ளது.

▪️ மேலும், மிகச்சிறிய பாதுகாப்பு விரிசலைப் பயன்படுத்தி அதனூடு ஈஸ்டர் தாக்குதல் போன்ற ஒரு தாக்குதலை நடத்த அடிப்படைவாத அமைப்புகள் திட்டமிட்டுவது போன்ற பாரிய ஆபத்து நாட்டிற்கு இருக்கின்றது என்றும் ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

▪️ அதனால் தீவிரவாத செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளியெறியத்தக்க பாதுகாப்புக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான அவசியத்தையும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் . அத்துடன் நாட்டில் செயற்படுகின்ற இனவாத அமைப்புக்களை அரசு தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

Back to top button