உள்ளூர்

நாடு எப்போது திறக்கப்படும்? அரச தரப்பின் நிலைபாடு!

செப்டம்பர் 08, புதன் – 2021

▪️ உலக சுகாதார அமைப்பு மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தே இன்னுமும் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா, இல்லையா என அரசு முடிவெடுக்குமென இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 0.

▪️ நிபுணத்துவ மருத்துவர்களின் கூட்டத்தில் செப்டம்பர் 18 வரைக்கும் நாட்டை மூடிவைத்திருந்தால் 7,500 மரணங்களை தடுக்கலாமெனவும் ஒக்டோபர் 02 வரை நீடித்தால் மேலும் பல மரணங்களை தடுக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

▪️ அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கருத்துத் தெரிவித்த அவர்,

” அரசாங்கம் உலக சுகாதாரஸ்தாபனத்தினதும் நிபுணத்துவ மருத்துவர்களினதும் ஆலோசனைபடியே செயற்படுகிறது”

” இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் அதேவேளை கொரோனா தடுப்புக்கும் உச்ச நடவடிக்கை எடுத்து வருகிறது”.

” மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. சகல முடிவுகளையும் ஆராய்ந்து கொவிட் கட்டுப்பாட்டு செயலணி எடுக்கும். ஜனாதிபதியினதும் சுகாதார தரப்பினரதும் கூடுதலான காலம் இவ்வாரான பிரச்சினைகள் தொடர்பிலேயே செலவிடப்படுகிறது ”

” சகலரும் இணைந்து மக்களின் ஒத்துழைப்புடன் மரணங்களையும் தொற்றாளர் தொகைகளையும் குறைக்க முடியுமென எதிர்பார்க்கிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்

▪️ இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை திறப்பதாக இருந்தால் முறையான திட்டம் இருக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Back to top button