உள்ளூர்

திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் 22 வயது இளைஞனின் சடலம் மீட்பு.

செப்டம்பர் – 08, புதன் – 2021

▪️திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானையில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

▪️இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம் முள்ளிப் பொத்தானை சதாம் நகரைச் சேர்ந்த 22 வயதுடைய அலிபுல்லா அர்ஷான் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

▪️ சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.

▪️சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button