உள்ளூர்

டெல்டா தொடர்பில் ஆய்வில் புதிய தகவல்கள் ( தடுப்பூசி பெற்றுக்கொண்டோருக்கு அறிவுறுத்தல்!)

செப்டம்பர் – 09, வியாழன் – 2021

▪️ வீரியம் மிக்க பரவல் தன்மையுடைய டெல்டா வைரஸ் திரிபானது, முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கும் தொற்றக்கூடிய நிலை உள்ளதாக, உலகெங்கும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

▪️ இவ்வாறாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வின் தகவல் ‘நேச்சர்’ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

▪️மனிதர்களின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கடந்து செல்லக்கூடியது டெல்டா திரிபு என அதில் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

▪️ அந்த அறிக்கையை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, தடுப்பூசி ஏற்றத்தின் பின்னரும், கொவிட் தொற்று உறுதியாவதை தவிர்ப்பதற்கு, சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றவேண்டிதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்

Back to top button