உள்ளூர்

நாட்டு மக்களுக்கான மீண்டுமொரு அதிர்ச்சித் தகவல்

செப்டம்பர் – 09, வியாழன் -2021

▪️ கடந்த மாதமே விலை அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விலை அதிகரிப்பை அறிவிப்பு செய்துள்ளது லாப்ஸ் நிறுவனம்.

▪️ கடந்த மாதம் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 363 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மீண்டும் 12.5 கிலோ கிராம் எடைகொண்ட காஸ் சிலிண்டரின் விலையை 291 ரூபாவில் அதிகரிக்க வேண்டும் நிறுவனம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

▪️ இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதியளித்தால் லாப்ஸ் சிலிண்டரின் புதிய விலையாக 2147 ரூபாயாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

▪️ ஏற்கனவே நாட்டில் சில பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. மீண்டும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

Back to top button