உள்ளூர்breaking news

ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி பணம் விநியோகித்த முதியவர் கைது

செப்டம்பர் 06, திங்கள் – 2021

▪️ நெல்லியடி வதிரி மதவடியில் சுகாதார விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான மக்களை கூட்டி பணம் விநியோகித்த முதியவரை இன்று காலை நெல்லியடி பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

▪️ குறைந்தவருமானம் பெறும் குடும்பத்தினருக்கு 2000 ரூபா நிதி உதவி செய்வதாக தகவல் கிடைத்ததால் முதியவரின் வீட்டில் மக்கள் பெரும் கூட்டம் கூடியது.

▪️ அங்கு கூடிய பலரும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. யாரும் சமூக இடைவெளி பேணவில்லை. இது தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸார் விரைந்து செயற்பட்டு, அந்த பகுதியில் குவிந்த மக்களை அகற்றியதுடன், குறுத்த முதியவரையும் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர். வெளிநாட்டில் உள்ள மகன் 2 கோடி ரூபா பணம் அனுப்பியதாகவும், அதனை ஒருவருக்கு 2,000 ரூபா வீதம் விநியோகித்து வருவதாகவும் அந்த முதியவர் குறிப்பிட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளார்.

Back to top button