கெல்த் ரிப்ஸ்

இரும்புச்சத்து

இரும்புச் சத்து (iron supplements) என்பது உடலின் நலத்திற்கு தேவையான மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும்.

இது இயற்கையில் பெருமளவு கிடைக்கிறது.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்.

👉அனைத்து வகைக் கீரைவகைகள்,

👉, சுண்டக்காய், கொத்தவரை,புடலை ,பாகற்காய் போன்ற காய்கள்

👉சோளம், கேழ்வரகு, கம்பு, கொள்ளு, எள்ளு, சோயா பீன்ஸ், காராமணி, பட்டாணி, மொச்சை,அரிசி, கோதுமை முதலான தானியங்கள்

👉பப்பாளி, மாதுளம் பழம், சப்போட்டா, தற்பூசனி, அன்னாசிப்பழம் பேரிச்சம்பழம் போன்ற பழங்கள்

👉பால்,முட்டை

👉வெல்லத்திலும் அதிக இரும்புச்சத்து உள்ளது.

குழந்தைகளுக்காக கிடைக்கும் பாலில் சேர்க்கப்படும் இரும்புச்சத்து இந்த வகையைச் சேர்ந்ததே. உணவிலிருந்து கிடைக்கும் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்பட வைட்டமின் சி சத்து தேவைப்படுகிறது.

வைட்டமின் சி சத்து மிக்கவை: நெல்லிக்காய், எலுமிச்சை, முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய் கறிகள் மற்றும் கீரைவகைகள்..

இரும்பு சத்தில் ஹீம் இரும்பு, நான்ஹீம் இரும்பு என இரு வகைப்படுகின்றது.

அசைவ உணவில் இருப்பது ஹீம் இரும்பு 30 சதவீதம் வரை எளிதாய் உடல் எடுத்துக் கொள்கின்றது.

நான்ஹீம் இரும்பு தாவரவகை உணவில் உள்ளது. இதில் 2-10 சதவீதம் வரையே உடல் எடுத்துக்கொள்ளும், தக்காளி, ஆரஞ்சு போன்ற உணவுகள் நான்ஹீம் இரும்பு சத்தினை நன்கு எடுத்துக் கொள்ளப்பட உதவுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button