கெல்த் ரிப்ஸ்

காலையில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

 • சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவை செரிமானத்துக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும்.
 • சிலருக்கும் இனிப்போடு அன்றைய நாளைத் தொடங்குவது பிடிக்கும். அதற்காக காலையில் எடுத்துக்கொள்வது தவறு. வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடாமல் நாளைத் தொடங்குவதே அன்றைய தினத்தை இனிமையாக்கும்.
 • வெறும் வயிற்றில் நாம் எடுத்துக்கொள்ளும் இனிப்புகளில் இருக்கும் சர்க்கரை, உடலின் இன்சுலின் சுரப்பைக் கடுமையாகப் பாதிக்கும்;
 • அது கணையத்துக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி, சர்க்கரைநோய் தொடங்கி பெரிய உடல்கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
 • வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அதேபோல் இனிப்பு, கார பண்டங்களையும் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
 • காலையில் நாம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சுட்ட ரொட்டிககளை சாப்பிடுவதற்கு பதிலாக வெண்ணை கலந்த உணவுகள் மற்றும் கார்போஹைட்ரெட் உள்ள உணவுகளை காலையில் சாப்பிடுவதற்கு ஏற்றதாகும்.
 • பேக்கரியில் தயாராகும் இதுபோன்ற மாவுப் பண்டங்களில் `ஈஸ்ட்’ சேர்ப்பார்கள். அது, நம் வயிற்றை பாதிக்கும்; எரிச்சலை ஏற்படுத்தி வாயுத்தொல்லையை ஏற்படுத்திவிடும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும்.
 • காலை வேளைகளில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கவும்.இது ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உருவாக்கும் . நல்ல குணங்கள் சில இருந்தாலுமே, டயட்டில் இருப்பவர்களுக்கு யோகர்ட், தயிர் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டவே வேண்டாம்.
 • தக்காளியும் காலையில் ஏற்றதல்ல. அதில் அமிலம் அதிகமாக இருப்பதால் அமிலத்தன்மையை வயிற்றில் அதிகப்படுத்தி அசிடிட்டியை ஏற்படுத்தி இரைப்பை புண்களை உண்டாக்குகின்றது. இது தொடர்ந்தால், அல்சர் வரை வந்து அவதிப்பட நேரிடும்.
 • குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. செரிமானத்தை தாமதப்படுத்தும். அத்துடன் காலையில் ஐஸ் காபி பருகுவதையும் தவிர்க்க வேண்டும். அது சுறுசுறுப்பை தொலைத்து மந்தமான உணர்வை ஏற்படுத்தி விடும்.
 • கொய்யா, ஆரஞ்சு பழங்களை காலையில் சாப்பிடவே கூடாது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம்.
 • வாழைப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரிக்கும். ஆக, ரத்தத்தில் கல்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு சமநிலையில் இருக்காது. இது, இதய நோய்களை வரவழைத்து , இதயத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button