கெல்த் ரிப்ஸ்

இதய நோயாளிகளுக்கான உணவு முறைகள்

 • இதய நோயாளிகளுக்கான உணவு (1500 கலோரிகள்)
 • உப்பு 2 லிருந்து 3 கிராம் வரை குறைந்த அளவு
 • கொழுப்பு – 15 கிராம் வரை

தவிர்க்க வேண்டிய உணவுகள்

 1. உப்பு அதிகம் கலந்த உணவு வகைகள்,
 2. கொழுப்புள்ள உணவுப் பதார்த்தங்கள் (முட்டை மஞ்சள் கரு)
 3. எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுப்பண்டங்கள் (சிப்ஸ், சமோசா, அப்பளம், பஜ்ஜி, பூரி)
 4. தேங்காய், கேக், புட்டிங், ஐஸ்க்ரீம் வகைகள்
 5. இறைச்சியில் உள்ள தனிப்பட்ட உறுப்புகள், ( ஈரல், இரத்த வரை, கொழுப்பு)
 6. பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை (பால்கோவா, பாலாடைக் கட்டி, க்ரீம், சீஸ், நெய், வெண்ணெய் வகை .)
 7. முந்திரி, பாதாம், வேர்க்கடலை, எள் போன்ற பருப்பு வகைகள்.
 8. எனவே இவ்வாறான உணவுகளை இதய நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
 9. இதய நோயாளிகள் கோழிக்கறி சாப்பிடலாம். ஆனால் அதை பொரிக்கவோ அல்லது வறுக்கவோ கூடாது. குழம்பில் போட்டு சாப்பிடலாம். வாரத்துக்கு இரு முறை மட்டுமே.

சேர்த்துக் கொள்ள வேண்டியவை

நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.

 1. ஆகவே நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள், (வேக வைத்த காய்கறிகள், முளை கட்டிய தானிய வகைகள், தோலுடன் இருக்கக் கூடிய பழங்கள், புழுங்கலரிசி, கோதுமை மாவு மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள்)
 2. சோளம், மற்றும் சூரியகாந்தி எண்ணெய். பாவனைக்கு நல்லது.
 3. பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.

இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு அட்டவணை:

அதிகாலை -ஆடை நீக்கிய பால் அல்லது டீ ஒரு கப்

காலை உணவு-இரண்டு இட்லிகள் சாம்பாரு அல்லது இடியாப்பம் இரண்டு, அல்லது கார்ன் ஃபிளேக்ஸ் அல்லது ஓட்ஸ் கஞ்சி. ஒரு அவித்த முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்துக் கொள்ளலாம்.

இடைப்பட்ட நேரம் -மோர் அல்லது காய்கறி, கொழுப்பில்லாத இறைச்சி சூப் அல்லது ஜூஸ்.

மதிய உணவு-நன்றாகக் குழைந்த சாதம், சாம்பார் அல்லது பருப்புடன். காய்கறி இரண்டு வகைகள், உணவுடன் கோழிக்கறித் துண்டு இரண்டு அல்லது மீன்கறித் துண்டுகள் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம். பின் தயிர் அல்லது மோர் அல்லது ஏதாவது ஒரு பழம்.

மாலை -ஆடை எடுக்கப்பட்ட பால் ஒரு கப், பிஸ்கட், சுண்டல் அல்லது காய்கறி கலந்த சாண்ட்விச் இரண்டு.

இரவு சாப்பாடு-எண்ணெய் இல்லாத சப்பாத்தி இரண்டு, காய்கறிக் கூட்டு, பருப்பு, கொழுப்பில்லாத இறைச்சி ஒரு சில துண்டுகள், பச்சையான காய்கறி சாலட் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

படுக்கச் செல்லுமுன் ஆடை எடுக்கப்பட்ட பால்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button