கெல்த் ரிப்ஸ்

இன்றைய மருத்துவ குறிப்பு

கண்களில் ‘ஸ்ட்ரெஸ்’ காரணம் என்ன? – சரி செய்வது எப்படி?

க‌ணி‌னி, கையடக்க தொலைபேசி போன்ற இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்தும் போது அவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு கண்களில் உள்ள விழிவெண்படலத்தை பெருமளவு பாதிக்கின்றன.

மனித உறுப்புகளில் மிகவும் மென்மையானது கண். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள், சம்பந்தப்பட்ட உறுப்புகளை பாதிப்பதோடு அல்லாமல் பல நேரங்களில் கண்களையும் பாதிப்பதுண்டு. அதனால் நாம் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அதிகமாக கண்களை தூரப்பார்வைக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

நம்மில் பெரும்பாலோனோர் நீண்ட நேரம் செல்போனை நீண்ட நேரமாக பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். கண்களுக்கு அருகே வைத்து பார்ப்பதால் அதன் கதிர்வீச்சுகளால் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் வேலை செய்பவர்கள் அவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அவற்றிலிருந்து வெளியாகும் கண்களில் உள்ள விழிவெண்படலத்தை வெகுவாக பாதிக்கின்றன. கூடவே இலவச இணைப்பாக தலைவலி, கண்வலி போன்றவையும் ஏற்படுத்துகின்றன.

சாதாரணமாக நாம் ஒரு நிமிடத்தில் பலமுறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் செல்போனை பார்த்து கொண்டிருக்கும் போது குழந்தைகள் இரண்டு, மூன்று நிமிடங்கள் கூட கண்களை இமைக்காமல் செல்போனை கூர்ந்து நோக்கி கொண்டிருக்கிறார்கள். கண்களை இமைக்க மறந்து விடுகின்றனர்.

இதனால் கண்ணின் விழி வெண்படலத்துக்கு மேலுள்ள ஈரப்பதம் வறட்சியடைந்து கண்களில் எரிச்சல் நீர் வடிதலும் கண்கள் சிவந்து தலைவலியும் ஏற்படும்.

இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள செல்போன், ஐபேட், லேப்டாப் போன்ற கேட்ஜெட்டுகளை குறைந்தபட்சம் 30 செ.மீ தொலைவில் வைத்து 20 நிமிடத்துக்கு மேலாக தொடர்ந்து பயன்படுத்தாது இருப்பது நல்லது.

செல்போன் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளை பயன்படுத்தும் போது சிறிது இடைவெளி விட்டு பசுமையான இடங்களை பார்க்க வேண்டும். இப்படி செய்வது சிலியரி தசைகளுக்கு நல்லது.

கண்களில் ஏற்படும் ஸ்ட்ரெஸை போக்க சில ஆலோசனைகள்.

👉 சிறிது நேரம் கண்களை மூடி இமைகள் மீது ஒரு துண்டு வெள்ளரிக்காயை வைக்கலாம்.

👉 கண் சொட்டு மருந்தையும் பயன்படுத்தலாம்

👉 கம்ப்யூட்டர் லேப்டாப் போன்றவற்றில் எழுத்துக்களை பெரிதுபடுத்தி பயன்படுத்தலாம்.

👉 கணினியின் திரை கண்பார்வை கோட்டிற்கு கீழே அமையும் படி பார்த்துகொள்ள வேண்டும்.

👉 கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் போது சிறுசிறு இடைவேளைகளை எடுத்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

👉 ஏசி இருந்தால் அது முகத்தில் படும்படி அமரக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button