corona news and updatesஉள்ளூர்

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 202 பேர் பலி.

செப்டம்பர் – 03, வெள்ளி- 2021

▪️நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 202 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

▪️இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,806 ஆக அதிகரித்துள்ளது.

▪️நேற்று உயிரிழந்தவர்களில் 89 பெண்களும் 113 ஆண்களும் உள்ளடங்குவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

▪️மேலும் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் இதுவரை கிடைத்த தகவலின் படி எண்ணிக்கை 3,644 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்கமைய கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 451,401 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

▪️அதன்படி மேலும் , நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 380,166 ஆக அதிகரித்துள்ளது.

Back to top button