corona news and updatesஉள்ளூர்

கொரோனா தொற்றினால் மேலும் பல மரணங்கள்.

செப்டம்பர் – 07, செவ்வாய்- 2021

▪️கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அவர்களுள் 97 ஆண்களும் 87 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் அடிப்படையில்,

▪️நாட்டில் மேலும் 1,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

▪️இன்றைய அறிக்கைப்படி இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 470,722 ஆக அதிகரித்துள்ளதாகவும் 1,769 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளதோடு 388,278 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

▪️ 68,351 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button