பொற்கால நினைவுகள்

நடிகர் சுருளி ராஜன் (1938-1980)

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கென்றே எம்ஜிஆர், சிவாகி காலகட்டங்களில் நிறையபேர் இருந்தார்கள் . அப்படிபட்ட அந்தகால சினிமாவில் இவர் என் படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் வந்தாலே போதும் என்ற அளவிற்கு இருந்தவர் நடிகர் சுருளி ராஜன்.

எப்படியாவது படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என தொடர்ந்து கஸ்டப்பட்டு கால்சீட் வாங்குவார்களாம், அந்தளவிற்கு பிரபலமாக இருந்துள்ளார்.

நடிகர், நடிகைகளுக்கு சமனாக பிஸியாக நடித்து வந்த சுருளிராஜன், எங்க வீட்டு பிள்ளை என்ற படத்தின் மூலம் நடிகர் எம்ஜிஆர் உடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தவர்.

ஒரு படத்திற்கு 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்கியவர் . யாரிடமும் பக்குவமாக பேசக்கூடியவர், பத்திரிக்கையாளர்களுக்கென்றால் தனி மரியாதை.

நடிகர் சுருளி ராஜன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும். தந்தையாரின் இறப்பிற்குப்பின் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.

மதுரையில் வேலைபார்த்துக்கொண்டே தன்னார்வ நாடகங்களில் நடித்து வந்த இவர் 1959ம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார்.

முதன் முதலில் கலைஞரின் காகிதப்பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார். பின்னர் தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்படக்கழகத்தால் எடுக்கப்பட்ட இரவும் பகலும் (1965) என்ற திரைப்படத்தில் நடித்தார், அப்போதே “காதல் படுத்தும்பாடு” என்ற படத்திலும் நடித்தார். 1970ல் திருமலை தென்குமரி, 1971ல் ஆதிபராசக்தி என்ற படத்தில் சென்னை மீனவர் பாசை பேசி அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

கவிதா ஹோட்டலில் எப்பொழுதும் அவருக்கு என ஒரு ரூம் இருக்குமாம் பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அனைவரையும் மதுவினால் குளிப்பாட்டி அனுப்பிவிடுவாராம்.

சுருளி ராஜன் 

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.இவருக்கு 1981-1982 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனால் நாளடைவில் நுரையீரல் பாதிப்படைந்து உடம்பில் சர்க்கரை நோய் மற்றும் மஞ்சள் காமாலை நோயும் சேர்ந்து அதிகரித்ததால் காப்பாறமுடியாமல் இளவயதிலேயே மரணமடைந்தார்.

அவரது உயிரைகாக்க எம்ஜிஆர் விமானத்தில் கூட மருந்துகளை வாங்கி வந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லையாம்.

நகைச்சுவை நடிகர் சுருளி ராஜன் தனது புகழின் உச்சியில் இருந்த 1980ம் ஆண்டு 42 வயதிலேயே உ‌யி‌ரிழ‌ந்தார் .

Back to top button