சினிமாஇந்திய சினிமா

காஞ்சனா (3) பட நாயகி தற்கொலை.!

ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்த நடிகை அலெக்சாண்டாரா ஜாவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராகவா லாரான்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘காஞ்சனா 3’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ‘ரோஸி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரஷ்யாவை சேர்ந்த 24 வயதான அலெக்சாண்டாரா ஜாவி.

கோவாவில் தங்கியிருந்த அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது காதலர் அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார் என்றும் அதனால் அலெக்சாண்டாரா ஜாவி மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் தங்கியிருந்த பகுதியை சார்ந்த மக்கள் கூறுகிறார்கள்.

அவரது மரணம் குறித்த தகவல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button