கிறுக்கல்கள்

மானிடரே…!

மானிடரே…!

தினமும் அறிந்தோ அறியாமலோ உன் பிறப்பினை நீ தூற்றிடும் உண்மை அறிவாயோ…?

நிம்மதி நிலையில் மனம் உறுதிக் கொண்டு நிற்கும் போது தெளிவான அறிவுடன் செயற்படும் நீயே புத்தி நிலை மாறும் போது வார்த்தைகளில் தடுமாற்றம் கொண்டு உன் தரத்தினை இழப்பதேன்…?

பிறரை தூற்றுவதாக எண்ணி உன்னை நீயே தூற்றிக் கொள்கிறாய் என்ற உண்மை உணர்வாய். பிறரை தூற்றிட நீ உபயோகிக்கும் இவ் வார்த்தையின் வழி தான் நீ இவ்வுலகிற்கு வந்தாய் என்ற செய்தி அறியாயோ…?

இல்லை இவ் உலகின் அறிவியல் உனக்கு இதை சொல்லித் தர தவறியதோ…?

உடலுறவு கொள்ளும் போது உன் உயிரினை கருவாக ஏற்கும் பாகமும் அது தான் என்பதை மறந்தாயோ…?

இவ்வுலகிற்கு நீ வரும் போதும் உன்னால் இவ்வுலகிற்கு ஓர் உயிர் வரும் போதும் புனிதமான ஓர் வாயிலாக நீ உயர்த்தும் அவளின் பாகம் அதனை, நீ சினம் கொண்டு புத்தி தடுமாறும் போது தூற்ற எய்யும் வார்த்தை அம்புகளில் ஒன்றாக பிரயோகிப்பதேனோ…?

அவளை தலை குனிய செய்யவும், அவள் மனதினை சுக்குநூறாக உடைத்திடவும் அந்த வார்த்தை தனை இழி வார்த்தையாக தாழ்த்தி நீ ஏந்தும் போது, உன் பிறப்பின் தரத்தினை நீ குறைத்துக் கொள்வதற்கு சமனாகாதோ…?

ஓர் உண்மை உணர்…! இவ் வார்த்தையால் நீ தூற்றுவது பிறரை அல்லவே… உன் பிறப்பினையே…

மனிதி

Leave a Reply

Your email address will not be published.

Back to top button