கல்விஉள்ளூர்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று வெளியான தகவல்

செப்டம்பர் – 08, புதன் – 2021

▪️ நாட்டில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை கிடையாது என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

▪️ இன்று (08) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

▪️ நாட்டில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாயின் அதற்கான அனுமதியை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ள அவர் எனினும், அவ்வாறான சூழ்நிலை தற்போது கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். க‌ல்வி நடவைக்கைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு எனவும், அந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

▪️ அவ்வாறான சூழ்நிலையை உருவாக்கி, தம்மிடம் உறுதிப்படுத்தினால், மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை தம்மால் வழங்க முடியும் எனவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

▪️ பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொவிட் பரவலை தடுப்பதற்கும், மாணவர்களின் ஊடாக வீட்டிலுள்ளவர்களுக்கு கொவிட் பரவுவதை தடுப்பதற்குமான வழிகளை ஏற்படுத்த வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Back to top button